மேலும்

மாதம்: July 2018

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பேச்சு

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரிவசம் விளக்கமளித்துள்ளார்.

இராணுவத்தில் மூக்கை நுழைக்கிறார் சரத் பொன்சேகா – சிறிலங்கா அதிபரிடம் முறைப்பாடு

சிறிலங்காவின் இராணுவ விவகாரங்களுக்குள், முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மூக்கை நுழைக்கிறார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குமார் சங்கக்காரவுக்கு ஐக்கிய தேசிய முன்னணி ஆதரவு

சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தீவிர அரசியலில் நுழைந்தால், அவருக்கு ஐக்கிய தேசிய முன்னணி ஆதரவு அளிக்கும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்திய- சீன இராஜதந்திர இழுபறிகளால் வீடமைப்புத் திட்டம் முடக்கம்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்களால், வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் முடங்கியுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சிறிலங்கா அதிபருடன் அமெரிக்காவின் பசுபிக் இராணுவத் தளபதி பேச்சு

அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைத் தளபதி ஜெனரல் ரொபேர்ட் பிறவுண், நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஐதேக செயற்குழுவில் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது விஜயகலா குறித்த விசாரணை அறிக்கை

விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட  குழுவின் அறிக்கை, இன்று ஐதேக செயற்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

10 ஆண்டுகளில் 12,186 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு

சிறிலங்காவில் 2008ஆம் ஆண்டுக்கும், 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 12,186  விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மகிந்தவின் வலையில் வீழ்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இடைநிறுத்தம்

சிறிலங்கா அரசாங்கத்தின் உல்லாசப் பயண சலுகைகளைப் பெற்றுக் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இயன் பாய்ஸ்லி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

விஜயகலாவிடம் 3 மணி நேரம் விசாரணை

விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று, உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம், சிறிலங்கா காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர்.

போர்த்தளபாட விற்பனை குறித்துப் பேச கொழும்பு வருகிறார் ரஷ்ய ஆயுத வணிகர்

சிறிலங்காவுக்கு போர்த்தளபாடங்களை விற்பனை செய்வது பற்றிய பேச்சுக்களை நடத்துவதற்காக, ரஷ்ய அரசின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான, Rosboronoexport நிறுவனத்தின் தலைவர்  நிக்கி அலெக்ஸ்சான்ட்ரோவா அடுத்தவாரம் கொழும்பு வரவுள்ளார்.