மேலும்

ஆயுதப்படைகளுக்கான பயிற்சி – பாகிஸ்தான் தளபதியுடன் சிறிலங்கா அதிபர் பேச்சு

ஆயுதப் படைகளுக்கான பயிற்சித் திட்டங்கள் குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் சுபைர் மகமூட் ஹயட்டும் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

நான்கு நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் சுபைர் மகமூட் ஹயட் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, நேற்றுமுன்தினம் அவரது பொலன்னறுவ இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தப் பேச்சுக்களின் போது, சிறிலங்கா- பாகிஸ்தான் ஆயுதப்படைகளுக்கிடையிலான பயிற்சித் திட்டங்கள் தொடர்பான சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது என்று சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், சிறிலங்காவின் முப்படை அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கும் வகையில், கொள்ளுப்பிட்டியில்  பாதுகாப்புச் சேவைகள் கல்லூரியை அமைப்பதற்கு பாகிஸ்தான் வழங்கியு ஓத்துழைப்புக்கும் சிறிலங்கா அதிபர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *