மேலும்

மாதம்: April 2018

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவின் இந்தியப் பயணத்துக்கு நீதிமன்றம் தடை

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தலைமை அதிகாரியும், பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் தற்போதைய தளபதியுமான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள வழங்கிய அனுமதியை ரத்துச் செய்துள்ள கல்கிசை நீதிமன்றம், அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கூட்டமைப்பின் ஆதரவை பெறக் கூடாது – ஐதேகவை எச்சரித்த சிறிலங்கா அதிபர்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“இன்று போய்…. நாளை வா“ – ஐதேகவினரை அனுப்பிய சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், ஐதேக நாடாளுமன்றக் குழுவையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ரணில் பதவி விலக வேண்டும் – சுதந்திரக் கட்சி நாடாளுமன்றக் குழு முடிவு

நம்பிக்கையில்லா பிரேரணை நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து விலகுமாறு கோருவதென, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு  தீர்மானித்துள்ளது.

வலி.வடக்கிலும் கூட்டமைப்பு ஆட்சி – கை, யானை, வீணை கைகொடுத்தன

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிறுத்திய சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ரணிலுக்கு ஆதரவா? – ரெலோ உயர்குழு முக்கிய முடிவு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தமது நிலைப்பாட்டை கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியிடவுள்ளது.

மைத்திரியின் கையில் தான் வெற்றி – கைவிரித்தார் மகிந்த

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெறுவது, அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கையிலேயே இருப்பதாக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நல்ல வாய்ப்பை தவறவிடக் கூடாது கூட்டமைப்பு – முதலமைச்சர் அறிவுரை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை,  தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும், அதன் மூலம், நன்மையைப் பெற்றுக் கொடுக்கும் வகையில்  கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு ஆதரவளிக்க ஈபிஆர்எல்எவ் நிபந்தனை – தனியான பேரத்தில் இறங்கியது

நம்பிக்கையில்லா பிரேரணை விடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பங்காளியான ஈபிஆர்எல்எவ், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தனியான பேரத்தில் இறங்கியுள்ளது.

சிறிலங்கா அமைச்சருக்கு இந்திய ஆலயத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு

சிறிலங்காவின் பௌத்த சாசன அமைச்சரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற லிங்கராஜ ஆலயத்துக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.