மேலும்

முதலமைச்சரால் முழந்தாளிட வைக்கப்பட்ட அதிபர் 7 மணிநேரம் சாட்சியம்

The principal of Badulla Girls School R. Bhavaniஊவா மாகாண முதலமைச்சர் சாமர சமிந்த தசநாயக்கவினால், முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பதுளை பெண்கள் பாடசாலை அதிபர் ஆர். பவானி ஏழு மணி நேரம் சாட்சியம் அளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பதுளை பெண்கள் பாடசாலை அதிபர் பவானி நேற்று, சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார்.

இதன் போது அவர் சுமார் 7 மணிநேரம் சாட்சியம் அளித்துள்ளார்.

அதேவேளை, ஊவா மாகாண கல்வி அமைச்சின செயலர் சந்தியா அம்பன்வல உள்ளிட்ட 6 அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *