மேலும்

1400 பக்க அறிக்கையை ஆராய்ந்த பின்னரே நடவடிக்கை குறித்த முடிவு

maithri-met-missing (1)சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்னர், அதிபர் செயலக அதிகாரிகள் அதனை முழுமையாக ஆராயவுள்ளனர்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை நடத்த கடந்த ஜனவரி மாதம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் உருவாக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதியரசர் கே.ரி.சித்ரசிறி தலைமையிலான- ஆணைக்குழு தமது அறிக்கையை நேற்று பிற்பகல் சிறிலங்கா அதிபரிடம் கையளித்துள்ளது.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள அதிபர் செயலக அதிகாரி ஒருவர்,

விசாரணை அறிக்கை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்வதற்கு முன்னர், அறிக்கையை முழுமையாக அதிபர் செயலக அதிகாரிகள் ஆராயவுள்ளனர்.

இந்த அறிக்கை விரிவான ஒன்று. அதிகாரிகள் இதனை ஆராய்வதற்கு சற்று காலஅவகாசம் தேவைப்படும்.

இந்த அறிக்கை, சாட்சியங்கள், இணைப்புகள்,பரிந்துரைகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. 100 இணைப்புகளுடன் இந்த அறிக்கை மொத்தம் 1400 பக்கங்களைக் கொண்டதாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

அதேசேளை, 70 சாட்சிகளின் சாட்சியங்களையும் இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *