மேலும்

அமெரிக்க வர்த்தகச் செயலருடன் மங்கள சமரவீர பேச்சு

mangala- Wilbur Rossஅமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவின் வர்த்தகச் செயலர் வில்பர் ரோசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்தில், மூத்த அமைச்சர்களில் ஒருவரான வில்பர் ரோசுடனான இந்தச் சந்திப்பில், இருதரப்பு உறவுகள், மற்றும் வர்த்தகத்தை விரிவுபடுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, மிலேனியம் சவால் நிதியத்தின் பிராந்திய பிரதி உதவித் தலைவர் பத்திமா சூமரையும் சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறிலங்காவுக்கு 700 மில்லியன் டொலர் உதவி மிலேனியம் சவால் நிதியத்தின் ஊடாக வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *