மேலும்

திலீபன் நினைவிடத்தை அகற்றுமாறு யாழ். மாநகரசபைக்கு சிறிலங்கா காவல்துறை உத்தரவு

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் உள்ள அனுமதியற்ற கட்டுமானங்களை உடனடியாக அகற்றுமாறு, சிறிலங்கா காவல்துறையின் யாழ்.மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர்,  யாழ்ப்பாண மாநகர சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம், உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் நினைவாக,  நல்லூர் பின் வீதியில் உள்ள, ஆலயத்திற்குச் சொந்தமான நிலத்தில், இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலம், யாழ்ப்பாண மாநகர சபைக்கு நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாநகர சபையிடமிருந்து உரிய அனுமதி பெறப்படாமல் இந்த நினைவிடக் கட்டுமானங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பிரதி காவல்துறை மா அதிபர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கட்டுமானங்கள் பொதுமக்களிடையே போர்க்கால நினைவுகளைத் தூண்டி, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், குறித்த கட்டுமானங்களை உடனடியாக இடித்து அகற்றுமாறு, அவர்  யாழ்ப்பாண மாநகர சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *