மேலும்

Tag Archives: பிரெஞ்சு

ருவான் விஜேவர்த்தனவுடன் பிரெஞ்சு கூட்டுப்படைத் தளபதி சந்திப்பு

இந்தியப் பெருங்கடலில் நிலைகொண்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி றியர் அட்மிரல் டிடியர் பியாட்டன் (Rear Admiral Didier Piaton) சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சி – பிரெஞ்சு போர்க்கப்பலின் தளபதி தெரிவிப்பு

சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை ஒழுங்கு செய்யவுள்ளதாக பிரெஞ்சுக் கடற்படையின் மிஸ்ரால் கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் ஸ்ரனிஸ்லஸ் டி சார்கெரஸ் தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு கடற்படையின் உயர் மட்டத் தளபதி சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் பேச்சு

பிரெஞ்சு கடற்படையின் கடல்சார்படையின் பிரதித் தளபதி றியர் அட்மிரல் ஒலிவர் லாபாஸ் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இன்று சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அபிவிருத்திக்கான பிரெஞ்சு முகவரகத்துக்கு இராஜதந்திர அந்தஸ்து வழங்குகிறது சிறிலங்கா

அபிவிருத்திக்கான பிரெஞ்சு முகவரகத்தின் பணியகம் ஒன்றை சிறிலங்காவில் அமைப்பதற்கும், அதற்கு இராஜதந்திர நிலையை வழங்குவதற்கும் சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்காவில் சாதகமான முன்னேற்றங்கள் – பிரெஞ்சு அதிபர்

சிறிலங்காவில் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக, பிரெஞ்சு அதிபர் பிராங்கோயிஸ் ஹொலன்ட் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் மாளிகையில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு பிரெஞ்சு அதிபர் புத்தாண்டு வரவேற்பு விருந்துபசாரத்தை அளித்தார்.

சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி றியர் அட்மிரல் டிடியர் பிளேட்டன், சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பிரெஞ்சுப் பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா படைத் தளபதிகளுடன் பேச்சு

சிறிலங்காவுக்கான வதிவிடமற்ற பிரெஞ்சுப் பாதுகாப்பு ஆலோசகர் கொமாண்டர் லொயிக் பிசோட் நேற்று சிறிலங்காவின் இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கேன்ஸ் விழாவில் ஈழப்போரின் பின்புலத்தைக் கொண்ட ‘தீபன்’ திரைப்படம் – விருதுக்குப் போட்டி

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான ஜக்குவஸ் ஓடியேட்டால் இயக்கப்பட்ட ‘தீபன்’ (Dheepan)  என்கின்ற திரைப்படம் வியாழக்கிழமை இடம்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் சிறிலங்காவில் போரால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.