எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவுக்கு குத்தகைக்கே வழங்கப்படும் – சிறிலங்கா பிரதமர்
திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவுக்கு குத்தகைக்கே வழங்கப்படவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தேசிய சொத்துக்களை தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளுக்குனு விற்பனை செய்வதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்-
‘கூட்டாக இணைந்து செயற்படுத்தும் திட்டத்தின் கீழ் திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவுக்கு குத்தகைக்கே வழங்கப்படவுள்ளன.
இரண்டு நாடுகளினதும், கூட்டுச் செயலணி திருகோணமலை அபிவிருத்தி தொடர்பான முதலீட்டுத் திட்டங்களை வகுக்கும்.
திருகோணமலை அபிவிருத்தியில் ஜப்பானும் இணைந்து கொள்ளக் கூடும்.
இந்த எண்ணெய்த் தாங்கிகளைக் குத்தகைக்கு விடுவதன் மூலம், இந்தியாவின் எண்ணெய்த் தேவையை பூர்த்தி செய்யப் போகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.