மேலும்

மாதம்: April 2017

யாழ்ப்பாணமும் செல்கிறார் இந்தியப் பிரதமர் மோடி

அடுத்தமாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கும் செல்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

பொறுப்புக்கூறலை செய்யாவிடின் பயங்கரமான விளைவுகள் ஏற்படும் – சிவில் சமூகம் எச்சரிக்கை

சிறிலங்கா அரசாங்கம் அனுசரணை வழங்கிய ஜெனிவா தீர்மானத்துக்கு அமைவாக, மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழர் தாயகத்தில் அன்னை பூபதி நினைவு கூரல் நிகழ்வுகள்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் நடத்தி வந்த போரை நிறுத்தி,  நிபந்தனையின்றிப் பேச்சு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நேற்று தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றன.

சிறிலங்கா பிரதமரின் புதுடெல்லி பயண நாட்கள் இன்னமும் முடிவாகவில்லை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லிக்கான பயண நாட்கள் குறித்த ஒழுங்குகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று புதுடெல்லி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார் மோடி

சிறிலங்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைப்பார் என்று சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பிரித்தானிய அமைச்சரின் சிறிலங்கா பயணம் ரத்து

பிரித்தானியாவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக அமைச்சர் அலோக் சர்மா சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை ரத்துச் செய்துள்ளார்.

தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கும் இடம்பெயர்ந்த மக்கள்

சிறிலங்காவில் நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தம் நிறைவு பெற்று  எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது பெரும்பாலான மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதுடன் தமது வாழ்விடங்களையும் மீளக்கட்டியெழுப்பி வருகின்றனர்.

மோடியின் கொழும்பு பயணத்தின் போது கூட்டு அபிவிருத்தி உடன்பாடு செய்ய தயாராகும் சிறிலங்கா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, கூட்டு அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட வாய்ப்புகள் உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லசந்த கொலை இரகசியங்கள் – சிறிலங்காவின் மூத்த படை அதிகாரிகள் முரண்பாடான வாக்குமூலம்

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்ட சிறிலங்காவின் மூன்று மூத்த முன்னாள் படை அதிகாரிகளும் முரண்பாடான வாக்குமூலங்களை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா இராணுவத் தளபதி ஓய்வுபெற முடிவு?

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா ஓய்வு பெறுவதற்கு முடிவு செய்திருப்பதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.