மேலும்

சிறிலங்கா பிரதமரின் புதுடெல்லி பயண நாட்கள் இன்னமும் முடிவாகவில்லை

ranil-சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லிக்கான பயண நாட்கள் குறித்த ஒழுங்குகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று புதுடெல்லி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருதரப்பு உறவுகளை மீளாய்வு செய்யும் நோக்கில் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

புதுடெல்லியில் உள்ள அதிகாரிகள், சிறிலங்கா பிரதமரின் பயணம் இடம்பெறவுள்ளதை உறுதி செய்திருந்தனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொழும்புப் பயணத்துக்கு முன்னதாக, சிறிலங்கா பிரதமரின் இந்தியப் பயணம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பிரதமர் கொழும்பு வந்திருக்கும் போது, இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடுவது தொடர்பான இறுதிக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதே ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லிப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஏப்ரல் மாத இறுதியில் இந்தப் பயணம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பயண நாட்கள் தொடர்பாக இன்னமும் இறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று புதுடெல்லி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு சிறிலங்கா பிரதமராகப் பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்கு மேற்கொள்ளவிருக்கும் மூன்றாவது பயணம் இதுவாகும். ஏற்கனவே அவர் 2015 செப்ரெம்பரிலும், 2016 ஒக்ரோபரிலும் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *