மேலும்

மாணவர்கள் கடத்திக் கொலை – சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் இருவர் கைது

sl-navyகொழும்பில் ஆறு மாணவர்களைக் கடத்தி கப்பம் கோரி, கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொமடோர் சுமித் ரணசிங்க, லீடிங் சீமன் லக்ஷ்மன் உதயகுமார ஆகிய கடற்படை அதிகாரிகளே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2008 ஆம் ஆண்டு கொழும்பில் அனைத்துலகப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த ஆறு மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு, கப்பம் கோரப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர்..

கல்வி கற்பதற்காக பிரித்தானியா செல்லும் தமது நண்பனின் பிரியாவிடை விருந்தில் பங்கேற்று விட்டு திரும்பிய போதே இந்த மாணவர்கள் கடத்தப்பட்டனர்.

கொழும்பிலும் திருகோணமலையிலும், வசதியான குடும்பங்களைச் சேர்ந்த 28 மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இந்தக் குற்றங்களுக்கு சிறிலங்கா கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் குறிப்பிட்ட அதிகாரிகளே பொறுப்பு என்று கண்டறிந்துள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், குற்றப் புலனாய்வுப் பிரிவு தற்போது, ஆறு மாணவர்கள் கடத்தப்பட்ட வழக்குத் தொடர்பாகவே விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *