மேலும்

அமெரிக்காவும் புலம்பெயர் தமிழர்களுமே ஆட்சி மாற்றத்தின் பிரதான காரணிகள் – என்கிறார் மகிந்த

Mahinda-Rajapaksaசிறிலங்காவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் இந்தியா பிரதான பங்கை வகிக்கவில்லை என்றும், அமெரிக்காவும் புலம்பெயர் தமிழர்களுமே பிரதான பங்கை வகித்ததாகவும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று  வெளிநாட்டு செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதில் பிரதான பங்கை இந்தியா வகிக்கவில்லை. அமெரிக்காவும், புலம்பெயர் தமிழர்களுமே பிரதான பங்கு வகித்தனர். இந்தியா துணைப் பங்கையே ஆற்றியிருந்தது.

சிறிலங்கா, மியான்மார், நைஜீரியாவில் ஆட்சிமாற்றங்களை ஏற்படுத்துவதற்கு, 648 மில்லியன் டொலரைச் செலவிட்டுள்ளதாக அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.

இப்போதும் கூட சிறிலங்காவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அபிவிருத்திக்காக ஒரு பில்லியன் ரூபாவை செலவிடுகிறது

தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவுடன் நேசம் பாராட்டி வருகிறது. சிறிலங்கா அதிகாரிகளுக்கு அவர்கள் பயிற்சி அளிக்கிறார்கள்.

அமெரிக்கர்கள் வந்து நாட்டை ஆட்சி செய்கிறார்கள்.” என்றும் மகிந்த ராஜபக்ச கோபத்துடன் குறிப்பிட்டார்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *