மேலும்

மாதம்: November 2016

குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா? – சிறிலங்காவுக்கு சீனத் தூதுவர் சவால்

கடந்த ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் அதிக வட்டிக்கு கடன் பெறப்பட்டது என்பதை சிறிலங்கா அரசாங்கத்தினால் நிரூபிக்க முடியுமா? என்று சவால் விடுத்துள்ளார் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் தெரிவித்துள்ளார்.

மேலும் நான்கு ஆவா குழு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

ஆவா குழுவுடன் இணைந்து வடக்கில் குழப்ப நிலையை ஏற்படுத்த முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட மேலும் நான்கு சந்தேக நபர்கள் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டியது எனது கடமை – சிறிலங்கா அதிபர்

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியது தனது பொறுப்பு மாத்திரமல்ல, கடமையும் கூட என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘த ஹிந்து’  ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

போர்க்குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நேற்றுடன் ஓய்வு

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றம் இழைத்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சிறிலங்கா இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

ட்ரம்பின் வெற்றியை சிங்களவர்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் – கோத்தா

அமெரிக்காவில் பெரும்பான்மையின மக்கள், டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளதை, சிறிலங்காவின் பெரும்பான்மையின சிங்களவர்கள் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆவா குழுவுடன் தொடர்புடைய சிப்பாய் கைது குறித்து சிறிலங்கா இராணுவத்துக்குத் தெரியாதாம்

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்களை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன நிராகரித்துள்ளார்.

புலிகளைத் தோற்கடிக்க உதவிய குடியரசுக் கட்சி மீண்டும் ஆட்சியில் – மகிழ்ச்சியில் மகிந்த

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க உதவிய குடியரசுக் கட்சி மீண்டும் அமெரிக்காவில் பதவிக்கு வந்திருப்பதையிட்டு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

ஆவா குழுவை சிறிலங்கா இராணுவம் உருவாக்கியதாக கூறவில்லை – ராஜித சேனாரத்ன

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை சிறிலங்கா இராணுவத்தினரே உருவாக்கினர் என்று தான் கூறவில்லை என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சீனாவின் கொடையில் வடக்கு, கிழக்கில் 100 விகாரைகளைப் புனரமைக்க சிறிலங்கா முடிவு

சீனாவில் இருந்து அளிக்கப்பட்ட கொடைகளைப் பயன்படுத்தி, வடக்கு- கிழக்கில் உள்ள 100 பௌத்த விகாரைகளை சிறிலங்கா அரசாங்கம் புனரமைப்புச் செய்யவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பணியகம் – சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

வவுனியாவில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பணியகத்தை (கொன்சூலர்) யாழ்ப்பாணத்துக்கு மாற்றுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.