மேலும்

மாதம்: August 2016

துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டதற்கு இந்தியாவே காரணம் – சிறிலங்கா அரசு ஒப்புதல்

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், சீனாவின் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட  கொழும்புத் துறைமுக நகரத் திட்டம், இந்தியாவின் அழுத்தங்களினால் தான் இடைநிறுத்தப்பட்டது என்று சிறிலங்கா அரசாங்கம் முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.

முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த தயார்- சிறிலங்கா அரசு

போரின் முடிவில் சரணடைந்த முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் அல்லது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட காலத்தில், உடல் ரீதியாக அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால், அதுகுறித்த மருத்துவ பரிசோதனைகளை நடத்த தயாராக இருப்பதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

காணாமல்போனோர் பணியகம் சிறிலங்காவுக்கு ஏற்றதல்ல – தயான் ஜெயதிலக

காணாமல் போனோருக்கான பணியகம் தொடர்பாக சிறிலங்கா  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்துள்ள மாதிரி வரைவு சிறிலங்காவுக்கு ஏற்றதல்ல என்று, சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

ஓயாமடுவவில் இராணுவ ஆயுத களஞ்சியத் தொகுதி – சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

அனுராதபுர மாவட்டத்தில் உள்ள ஓயாமடுவவில், அனைத்துலக தர நியமங்களுக்கு ஏற்ப, ஆயுதக் களஞ்சியத் தொகுதியை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சீனாவுக்கு 55 சதுர கி.மீ நிலத்தை வழங்க சிறிலங்கா இணக்கம்

சிறப்பு பொருளாதாதர வலயத்தை உருவாக்குவதற்கு, சீனாவுக்கு 55 சதுர கி.மீ நிலப்பகுதியை சிறிலங்கா வழங்கவுள்ளதாக பீஜிங்கில் உள்ள சிறிலங்கா தூதரகம் தெரிவித்துள்ளதாக, சைனா டெய்லி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரே சீனா கொள்கையையே சிறிலங்கா பௌத்தர்கள் ஆதரிக்கின்றனர் – அஸ்கிரிய பீடாதிபதி

சிறிலங்கா பௌத்தர்கள் ஒரே சீனா என்ற கொள்கையையே ஆதரிக்கின்றனர் என்று அஸ்கிரிய பீடாதிபதி வண.வரகாகொட ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இலங்கைத் தமிழ் அகதிகள் அமைதிப் பேரணி

தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரியும், நாடு திரும்ப விரும்புவோருக்கான தண்டப்பணத்தை குறைக்க வேண்டும் என்று கோரியும் சென்னையில் நேற்று இலங்கை தமிழ் அகதிகள் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர்.

அடுத்தமுறை வெறும் கையுடன் திரும்பமாட்டோம் – மகிந்த சூளுரை

அடுத்த முறை வீதியில் இறங்கும் போது, வெறும் கையுடன் திரும்பமாட்டோம், தேவையான இடங்களில் ஆதரவாளர்களை நிறுத்தி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வோம் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

சிறிலங்காவில் நடந்த போர் – நுணுக்கமாக ஆய்வு செய்யும் அமெரிக்கா

தமது எதிர்காலப் போர்களுக்காக, அமெரிக்காவுக்கு வெளியே, நடக்கும் போர்கள் மற்றும் இராணுவ விவகாரங்களை ஆராய்வதற்காக, வெஸ்ற் பொயின்ற் அதிகாரிகள் உலகம் முழுவதிலும் முன்னர் பயணங்களை மேற்கொண்டு வந்தனர்.

சிறிலங்காவுக்கு 90 மில்லியன் டொலர் சலுகைக்கடன் வழங்குகிறது ஜப்பான்

சிறிலங்காவின் அபிவிருத்திக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, ஜப்பானிய அரசாங்கம் 90 மில்லியன் டொலர் (13 பில்லியன் ரூபா) சலுகைக்கடனை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.