78 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 தமிழ் அரசியல் கைதிகள், நேற்றுக்காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 தமிழ் அரசியல் கைதிகள், நேற்றுக்காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பதன் மூலம், சிறிலங்கா மீது இந்தியா நேரடியான படையெடுப்பு நடத்த முயற்சிப்பதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.
வடக்கிலுள்ள தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது. தனியார் நிலங்களைக் கையகப்படுத்துவதன் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக சமூகத்தைத் தவறாக வழிநடத்துவதாகவும் தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சொஹைல் அமான் நேற்று சிறிலங்காவை வந்தடைந்துள்ள நிலையில், ஜேஎவ்-17 போர் விமானங்களை சிறிலங்காவுக்கு விற்கும் முயற்சிகளில் பாகிஸ்தான மீண்டும் இறங்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாணசபையின் அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்திருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் உள்ள கிரிந்த துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்த சாத்திய ஆய்வு மற்றும் விரிவான வடிவமைப்பை மேற்கொள்வது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடற்பரப்பில் இயற்கை எரிவாயு அகழ்வுக்கான சாத்தியங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு, அடுத்தவாரம் அமைச்சரவையின் அனுமதி கோரப்படும் என்று சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தம்மை விடுவிக்கக் கோரி தமிழ் அரசியல் கைதிகள், இன்று மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமது விடுதலையை விரைவுபடுத்தக் கோரி, அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பான புதிய உடன்பாடு வரும் 16ஆம் நாள் பீஜிங்கில் கையெழுத்திடப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக, இந்திய- சிறிலங்கா அரசாங்கங்களுக்கிடையில், வரும் செவ்வாய்க்கிழமை, பூர்வாங்கப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.