மேலும்

கிரிந்த துறைமுக அபிவிருத்தி ஆய்வும் சீனாவின் கையில்

Srilanka-chinaஅம்பாந்தோட்டையில் உள்ள கிரிந்த துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்த சாத்திய ஆய்வு மற்றும் விரிவான வடிவமைப்பை மேற்கொள்வது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிரிந்தவில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தை, விரிவாக்குவது தொடர்பான சாத்திய ஆய்வை மேற்கொள்வதற்கு பல்வேறு நிறுவனங்களிடையே போட்டி காணப்பட்ட போதிலும், சீன நிறுவனமான, ஹே சுன் கோர்ப் நிறுவனம் அந்த வாய்ப்பைக் கைப்பற்றியுள்ளது.

சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு இதற்கான வாய்ப்பை சீன நிறுவனத்துக்கு அளித்துள்ளது.

யால தேசிய பூங்காவின் வெளிஎல்லையில் அமைந்துள்ள கிரிந்த துறைமுகம் அருகே, சிறிலங்கா கடற்படைத் தளம் ஒன்றும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *