எட்கா உடன்பாடு குறித்துப் பேச சிறிலங்கா வருகிறார் இந்திய வர்த்தக அமைச்சர்
எட்கா உடன்பாடு தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்கு இந்தியாவின் வர்த்தக அமைச்சர் வி்ரைவில் சிறிலங்கா வருவார் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எட்கா உடன்பாடு தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்கு இந்தியாவின் வர்த்தக அமைச்சர் வி்ரைவில் சிறிலங்கா வருவார் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வட்டுவாகல் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் நிரந்தரமாகக் கையகப்படுத்தப்படத் திட்டமிடப்பட்ட நிலப்பகுதியை அளவீடு செய்து அவற்றின் எல்லைகளைக் குறிப்பதற்காகச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் கடந்த வாரம், கிராம மக்களால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
புதிய அரசியலமைப்பின் கீழ் அதிகாரங்களைப் பகிரும் போது, வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்று, கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகம் வலியுறுத்தியுள்ளது.
புனர்வாழ்வின் போதும், அதற்குப் பின்னரும் இடம்பெற்று வரும், முன்னாள் போராளிகளின் மர்ம மரணங்கள் தொடர்பாக வெளிநாட்டு மருத்துவர்களைக் கொண்டு விசாரணை செய்யப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் தற்போது நடந்து வரும் கலவரங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சொஹைல் அமான் விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான இராணுவ உறவுகள் வளர்ச்சியடைந்து வருவது, சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்குக்கு பிரதான அச்சுறுத்தலாக இருக்கும் என்று லங்கா சமசமாசக் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், நாளை ஓய்வுபெறவுள்ளார். இவரைக் கௌரவிக்கும் வகையில் இன்று சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இராப்போசன விருந்து அளிக்கப்படவுள்ளது.
காணாமற்போனோர் தொடர்பான பணியகம், சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரானதாகப் பயன்படுத்தப்படாது என்று சிறிலங்காவின் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான உதவிச் செயலர், சார்ள்ஸ் எச்.றிவ்கின் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வந்த பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சொஹைல் அமான், நேற்று சிறிலங்கா பிரதமர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.