மேலும்

வரும் 16ஆம் நாள் கைச்சாத்திடப்படுகிறது துறைமுக நகரத் திட்டம் குறித்த புதிய உடன்பாடு

Srilanka-chinaகொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பான புதிய உடன்பாடு வரும் 16ஆம் நாள் பீஜிங்கில் கையெழுத்திடப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் 2014ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்குப் பதிலாக, புதிய உடன்பாடு செய்து கொள்ளப்படவுள்ளது.

நிதி நகரம் என்ற பெயர் மாற்றத்துடன் செய்து கொள்ளப்படவுள்ள இந்த முத்தரப்பு உடன்பாடு வரும் 16ஆம் நாள் நல்ல நேரத்தில் கையெழுத்திடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த உடன்பாடு தொடர்பான விவகாரங்களைக் கவனிப்பதற்காக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

நிதி நகரம் தொடர்பான முத்தரப்பு உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில், பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலர், நகர அபிவிருத்தி அதிகாரசபை, திட்டத்தை முன்னெடுக்கும் சீன நிறுவனம் ஆகியன கையெழுத்திடவுள்ளன.

அதேநாளில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சீன அதிபர் லி கெகியாங்கிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *