மேலும்

மாதம்: July 2015

மகிந்தவுக்கு பிரதமர் பதவியை மறுப்பது ஏன்? – மைத்திரி அளித்த விளக்கம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படமாட்டார் என்று தெளிவாகத் தெரிவித்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதற்கான காரணத்தையும் விபரித்துள்ளார்.

அதிர்ச்சியில் கருணா – உறுதிமொழி கொடுத்து ஏமாற்றிவிட்டதாக விசனம்

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்.

ஜனநாயகப் போராளிகள் ‘புலிமுகச்சிலந்தி’ சின்னத்தில் போட்டி

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகப் போராளிகள் கட்சி புலிமுகச் சிலந்தியைத் தமது சின்னமாகத் தெரிவு செய்திருப்பதாக, அதன் தலைமை வேட்பாளர் ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

மகிந்த மீண்டும் தோற்கடிக்கப்படுவார், அவரது பிரதமர் கனவு பலிக்காது – மனம் திறந்தார் மைத்திரி

மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவதற்கு தான்  முற்றிலும் எதிரானவன் என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மீண்டும் தோற்கடிக்கப்படுவார் என்றும்  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மத்தியில் ஆற்றும் உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தேர்தலைக் குறிவைத்து செயற்படுகிறதாம் இந்தியாவின் ‘ரோ’

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான ரோ, பரப்புரையில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு கண்டறிந்துள்ளதாக, திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

எட்டு மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வியடையும் – சுசில் போடும் கணக்கு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இலகுவாக வெற்றியைப் பெறும் என்று அதன் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இன்று மாலை சிறப்பு அறிவிப்பை வெளியிடுகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் சிறப்பு செய்தியாளர் மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இந்த சிறப்பு செய்தியாளர் மாநாடு நடைபெறவுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தின் வாரிசுக்கும் வேட்புமனு நிராகரிப்பு

ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவுக்கு, எதிர்வருமு ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாய்ப்பளிக்க மறுத்துள்ளது.

குற்றப் பின்னணியால் மறுக்கப்பட்ட வாய்ப்புகள் – களத்தில் இறங்கிய 3 முதலமைச்சர்கள்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஊழல் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்கக் கூடாது என்ற கோரிக்கையையும் மீறி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிலருக்கு வாய்ப்பளித்துள்ளது.

தேசியப்பட்டியலில் மகிந்த முன்மொழிந்தோருக்கும் இடமில்லை – மைத்திரியின் யோசனையும் நிராகரிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில், மகிந்த ராஜபக்சவினால் முன்மொழியப்பட்ட பலருக்கு இடமளிக்கப்படாத அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமளிப்பதில்லை என்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடும் நிராகரிக்கப்பட்டுள்ளது.