மேலும்

மாதம்: July 2015

மைத்திரியின் உரைக்குத் தடைவிதித்தார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த செவ்வாய்க்கிழமை மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக வெளியிட்ட கருத்தை, இலத்திரனியல் ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்புவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தடைவிதித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் இருந்த மைத்திரியின் படம் அகற்றப்பட்டது

கொழும்பு 7இல் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் மாட்டப்பட்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் படம் திடீரென அகற்றப்பட்டுள்ளது.

லண்டனில் முதல்வர் விக்னேஸ்வரன் – பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சரைச் சந்திப்பு

பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

வடக்கின் மனித உரிமைகள் நிலையில் பெரிய முன்னேற்றமில்லை – பிரித்தானியா கவலை

சிறிலங்காவில் 2015ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், மனித உரிமைகள் நிலைமையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சில கவலைக்குரிய விடயங்கள் தொடர்வதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் கடன்களை ரத்துச் செய்யும் திட்டமில்லை – என்கிறது சிறிலங்கா அரசாங்கம்

சீனாவிடம் பெறப்பட்ட கடன்களை ரத்துச் செய்யும் திட்டம் எதுவும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடையாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில், போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மூன்று பிரதி அமைச்சர்கள் பதவி விலகினர் – மைத்திரி கருத்துக்கு எதிர் நடவடிக்கையாம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மூன்று பிரதி அமைச்சர்கள் இன்று தமது பதவிகளை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர். பிரதிஅமைச்சர்களான சுதர்சினி பெர்னான்டோ புள்ளே, லசந்த அழகியவன்ன, எரிக் வீரவர்த்தன ஆகிய மூவருமே இன்று பதவி விலகியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணித் தலைவர்கள் இன்று காலை மீண்டும் முக்கிய கூட்டம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று காலை எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

சிறிலங்கா தேர்தல் கண்காணிப்பில் 3 வெளிநாட்டுக் குழுக்கள் – அமெரிக்க குழுவுக்கு இடமில்லை

சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க மூன்று வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் வரவுள்ளன.

மகிந்தவைக் காப்பாற்ற முனைந்து மாட்டிக் கொண்ட சுசில்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு கொண்டு வர சதித் திட்டம் தீட்டப்பட்டதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சுமத்திய குற்றச்சாட்டை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த நிராகரித்துள்ளார்.