மேலும்

யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்கள்

tnaநாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில், போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா தேர்தல் திணைக்களம், மாவட்ட வாரியாக, கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்களை அனுப்பி வருகிறது.

இதன்படி, யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில், தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களின் இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கான இலக்கங்கள்

  • அருந்தவபாலன் கந்தையா – 01
  • அனந்தராஜ் நடராஜா -02
  • ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணம் -03
  • ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன் -04
  • ஈஸ்வரபாதம் சரவணபவன் -05
  • கந்தர் நல்லதம்பி ஶ்ரீகாந்தா -06
  • தருமலிங்கம்  சித்தார்த்தன்- 07
  • மதினி நெல்சன்- 08
  • மாவை சோமசுந்தரம் சேனாதிராசா- 09
  • சிவஞானம்  சிறிதரன்- 10

tna-jaffna-candidatesவாக்காளர் ஒருவர் தமக்கு வழங்கும் வாக்குச் சீட்டில், முதலில் அரசியல் கட்சியின் சின்னத்துக்கும் அதையடுத்து விரும்பிய மூன்று வேட்பாளர்களின் இலக்கங்களின் மீதும் புள்ளடியிடலாம். அல்லது, விரும்பிய ஒன்று அல்லது இரண்டு வேட்பாளருக்கும் புள்ளடியிடலாம்.

அதேவேளை, வேட்பாளர்கள் எவரையும் தெரிவு செய்ய விரும்பாவிடின் கட்சியின் சின்னத்துக்கு மட்டும் வாக்களிக்கலாம்.

எனினும், மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கோ, ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளுக்கோ புள்ளடியியிட்டால் அந்த வாக்கு செல்லுபடியற்றதாக கருதப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *