மேலும்

இந்திய இராணுவத் தளபதி நாளை சிறிலங்கா வருகிறார்

Lt-Gen-Dalbir-Singh-Suhagஇந்திய இராணுவ தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக்  நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா இராணுவ தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் அழைப்பின் பேரிலேயே,  இந்திய இராணுவ தளபதி கொழும்பு வரவுள்ளார்.

அவருடன், ஐந்து  அதிகாரிகளைக் கொண்ட குழுவும் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலர்,  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கூட்டுப்படைகளின் தளபதி முப்படைகளின் தளபதிகள், ஆகியோரை, இந்திய இராணுவத் தளபதி சந்திக்கவுள்ளார்.

அத்துடன், சிறிலங்காவின் பல்வேறு படைத் தலைமையகங்களுக்கும், கண்டி, காலி, அநுராதபுரம் ஆகிய நகரங்களுக்கும், அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *