மேலும்

19வது திருத்தத்தில் கருத்து வாக்கெடுப்புக்கு விட வேண்டிய பகுதிகள்

voteசிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 19வது திருத்தச் சட்டமூலத்தில், அரசியலமைப்புடன் உடன்படாத- நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் கருத்து வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்களை சிறிலங்கா உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இதுபற்றிய விபரங்களை வெளியிட்டார்.

இதன்படி, கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள் அடங்கிய வியாக்கியானத்தின் முழு விபரம் வருமாறு.

19ஆவது திருத்தம் என்ற சட்டமூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் 82 1 ஆம் உறுப்புரையுடன் இணங்குகின்றது.

அரசியலமைப்புச் சட்டத்தில் 82 (5) உறுப்புரையில் கூறப்பட்டுள்ளவாறு சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

மேலும் 19ஆவது திருத்தம் எனும் சட்ட மூலத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள, 11ஆவது சரத்தின் 42(3), 43 (1),  43 (3),  44 (2), 44 (3),  மற்றும் 44 (5) ஆகிய உபபிரிவுகள் மற்றும் 26 ஆம் சரத்தின் 104 (ஆ) (5) (இ) ஆம் உபபிரிவுகளும் அரசியலமைப்புச் சட்டத்தின் 83 ஆம் உறுப்புரையின் பிரகாரம் கருத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டு பொதுமக்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும்.

இதன்படி, கருத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டு பொதுமக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டிய திருத்தங்கள் வருமாறு-

42 (3) இன் கீழான பிரதமர் அமைச்சரவையின் பிரதானியாக (தலைவர்) இருத்தல்.

43 (1) பிரதமர் அமைச்சரவை அமைச்சர்களினதும் அமைச்சுகளினதும் எண்ணிக்கை தொடர்பிலும் அமைச்சர்களுக்கான அமைச்சுகளுக்கான பணிகளை தீர்மானித்தல்.

43(3 ) பிரதமர் அமைச்சர்களினது விடயங்களினதும் பணிகளினதும் குறித்தொதுக்குதல்களை எந்த நேரத்திலும் மாற்றியமைக்கலாம் என்பதுடன் அமைச்சரவையின் அமைப்பு ரீதியான மாற்றங்களை அதிபருக்கு விதந்துரைக்க முடியும்.

அத்தகைய மாற்றங்கள் அமைச்சரவையின் இடையறாத தொடர்ச்சியையும் பாராளுமன்றத்தின் பால் அமைச்சரவைக்குள்ள பொறுப்பின் இடையறா தொடர்ச்சியையும் பாதித்தல் ஆகாது.

44(2) பிரதமர் (1)ஆம் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட அமைச்சரவைகளுக்கு குறித்துரைக்கப்பட வேண்டியுள்ளதான விடயங்களையும் பணிகளையும் அத்துடன் அத்தகைய அமைச்சர்களின் பொறுப்பிலிருக்க வேண்டிய அமைச்சுக்கள் ஏதேனும் இருப்பின் அவற்றினையும் தீர்மானித்தல் வேண்டும்.

(1) ஆம் உப பிரிவில் பிரதமரின் ஆலோசனையின் பேரில் அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருந்து அமைச்சரவையின் உறுப்பினர்களாக இல்லாதவர்களை அமைச்சர்களாக நியமிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

44(3)பிரதமர் இவ்வுறுப்புரையின் (2) ஆம் உப பிரிவின் கீழ் ஏதேனும் மாற்றங்களைச் செய்யலாம்.

44 (5) பிரதமரின் கோரிக்கை மீது அமைச்சரவை அமைச்சர் எவரேனும் ஒருவருக்கு குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் விடயத்துக்குரிய அல்லது பணிக்குரிய அல்லது பணிப்பிற்குரிய அல்லது ஏதேனும் தத்துவத்தை அல்லது கடமையை அல்லது ஏதேனும் எழுத்திலான சட்டமூலம் ஒருவருக்கு அளிக்கப்பட்ட அல்லது அவர்மீது அல்லது அவர் மீது சுமத்தப்பட்ட ஏதேனும் தத்துவத்தை அல்லது கடமையை அமைச்சரவையின் உறுப்பினராக அல்லாத எவரேனும் அமைச்சருக்கு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தல் மூலம் கையளிக்கலாம்.

அத்துடன் இப்பிரிவின் கீழ் ஒருவருக்கு கையளிக்கப்பட்ட ஏதேனும் தத்துவத்தை அல்லது கடமையை அத்தகைய தத்துவம் அல்லது கடமை அமைச்சரவையின் அத்தகைய அமைச்சர் மீது அளிக்கப்பட்ட அல்லது சுமத்தப்பட்ட எழுத்திலான சட்டத்தில் முரணாக அது எவ்விதம் இருப்பினும் பிரயோகித்தலும் புரிதலும் அத்தகைய அமைச்சருக்கு சட்ட முறையானதாதல் வேண்டும்

104.(ஆ).(5).(இ). விடயத்திற்கேற்ப இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அல்லது சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு அல்லது அரசினால் சொந்தமாக்கப்பட்ட அல்லது அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வேறு ஏதேனும் ஒலிபரப்பு அல்லது ஒளிபரப்பு தொழில்முயற்சி அல்லது ஒவ்வோர் அல்லது தனியாள் ஒலிபரப்பு தொழில்முயற்சி அல்லது ஒளிபரப்பு தொழிற்படுத்துனர் தனியார் ஒலிபரப்பு, அல்லது ஒளிபரப்பு தொழிற்படுத்துனர் ஆ எனும் உபபிரிவின் கீழ் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட ஏதேனும் வழிகாட்டல்களை மீறுகின்றவிடத்து ஆணைக்குழுவானது தகுதி வாய்ந்த ஒரு அதிகாரியை பெயர் குறிப்பிட்டு அல்லது பதவி குறித்து நியமிக்கலாம் என்பதுடன் அவர் அத்தகைய நியமன நாளில் இருந்து  ஆணைக்குழுவின் அபிப்பிராயத்தில் தேர்தல் மீது தாக்கத்தை உண்டுபண்ணும் சகல அரசியல் ஒலிபரப்பு அல்லது வேறு ஒலிபரப்பு தொடர்பில் அது தொடர்பு படக்கூடியவாறான அளவிற்கு விடயத்திற்கேற்ப அத்தகைய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துடன் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் அல்லது அரசினால் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது ஒலிபரப்பு தொழில் முயற்சி அல்லது அத்தகைய தனியார் ஒலிபரப்பின் தொழில் முயற்சி அல்லது ஒலிபரப்பு தொழிற்படுத்துனர் தொழிற்முயற்சியின் தேர்தல் முடிவு வரை கையேற்றலும் வேண்டும்.

மேற்படி பிரிவுகள் கருத்து வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு மக்களின் அங்காரத்தை பெற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *