மேலும்

Archives

நாமல் கைது குறித்த மகிந்தவின் மனப்பகிர்வு

தனது மூத்த மகன் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச முகநூலில் கருத்து வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை அடித்து நொருக்கினார் விகாராதிபதி

மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வர மறுத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீது கொண்ட கோபத்தினால், அந்த விகாரையில் இருந்த சிறிலங்கா அதிபரின் பெயர் பொறித்த நினைவுக் கல்லை அடித்து நொருக்கி ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார் விகாராதிபதி.

மட்டக்களப்பு விமான நிலையத்தை திறந்து வைத்தார் சிறிலங்கா அதிபர்

புனரமைப்புச் செய்யப்பட்ட மட்டக்களப்பு உள்நாட்டு விமான நிலையத்தின் ஓடுபாதையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார்.

சிறிலங்கா அதிபர், பிரதமரைச் சந்தித்தார் சீன வெளிவிவகார அமைச்சர்

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்காவுடன் வலுவான உறவுகள் தொடரும் – சீன வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவில் பெரியளவிலான உட்கட்டமைப்பு மற்றும் தனியார் முதலீடுகளை சீனா தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும், சிறிலங்காவுடன் விரைவில் சுதந்திர வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்படும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா விமானப்படையிடம் இருந்து கைமாறியது மட்டக்களப்பு விமான நிலையம்

சிறிலங்கா விமானப்படையின் வசம் இருந்து வந்த மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சுஸ்மாவுடன் பேசினார் மலிக் சமரவிக்கிரம

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் எட்கா உடன்பாடு – இந்திய, சிறிலங்கா அமைச்சர்கள் இணக்கம்

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை (எட்கா) செய்து கொள்வது தொடர்பாக, விரைவாக பேச்சுக்களை நடத்தி, இந்த ஆண்டு இறுதிக்குள், முடிவை எட்டுவதற்கு, இந்தியாவும் சிறிலங்காவும் இணங்கியுள்ளன.

அமைச்சர்களை சிறைக்கூண்டுக்குள் அடைத்தார் சிறிலங்கா அதிபர்

புதிதாகத் திறந்து வைத்த மாத்தறை மாவட்ட மதுவரித் திணைக்கள கண்காணிப்பாளர் பணியகத்தில், சந்தேக நபர்களை அடைத்து வைப்பதற்கான அமைக்கப்பட்டுள்ள இரும்புக்கூண்டுக்குள், அமைச்சர்களை அடைத்து வைத்தார் சிறிலங்கா அதிபர் மைத்திரி்பால சிறி்சேன.

மத்திய வங்கி ஆளுனருக்கு நியமனக் கடிதம் வழங்கினார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கான நியமனக் கடிதத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று வழங்கினார்.