மேலும்

Archives

சர்ச்சைகளில் சிக்கியுள்ள காலிமுகத்திடல் நத்தார் மரம் – உலக சாதனை படைக்குமா?

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள கின்னஸ் சாதனைக்கான உலகின் மிக உயர்ந்த செயற்கை நத்தார் மரம் திட்டமிட்ட உயரத்தை விடவும் குறைவாகவே அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மயிலிட்டியை இராணுவம் கைவிடக் கூடாது – முன்னாள் படை அதிகாரிகள் வலியுறுத்தல்

எந்தவொரு சூழ்நிலையிலும் வலி.வடக்கில் உள்ள மயிலிட்டிப் பகுதியை, சிறிலங்கா இராணுவத்தினர் விட்டுக் கொடுக்கவோ, அங்கு மீள்குடியேற்றம் செய்யவோ அனுமதிக்கக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தேசிய போர் வீரர்கள் முன்னணி என்ற முன்னாள் படை அதிகாரிகளின் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கச்சதீவின் புதிய தோற்றம் – ஒளிப்படங்கள்

தமிழ்நாட்டுக்கும் இலங்கைத் தீவுக்கும் நடுவே அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவில், அமைந்துள்ள அந்தோனியார  ஆலயம் அருகே புதிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தேஜஸ் போர் விமானத்தை ஆய்வு செய்தார் சிறிலங்கா விமானப்படைத் தளபதி

அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு தாக்குதல் உலங்குவானுர்தியைச் செலுத்திப் பார்த்துள்ளார் என்றும், தேஜஸ் போர் விமானத்தின் கட்டுப்பாட்டு முறையை ஆய்வு செய்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரவிராஜ் கொலை வழக்கில் இருந்து எதிரிகள் விடுதலையானது எப்படி?

சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு,  வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க முடியாது என்று, சிங்கள ஜூரிகள் சபை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா படைகளுக்கு பயிற்சி அளிக்க பென்டகன் அனுப்பிய சிறப்புக் கண்காணிப்புக் குழு

இம்மாதத்தின் ஆரம்பத்தில், அமெரிக்க கடற்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுடன் ஒரு வாரகால கூட்டுப்பயிற்சிகளை மேற்கொண்ட பின்னர், அம்பாந்தோட்டையிலுள்ள மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

உலகின் மிக உயர்ந்த நத்தார் மரம் – கொழும்பில் தயார்நிலையில்

உலகின் மிக உயரமான நத்தார் மரத்தை நிறுவும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள காலிமுகத் திடலிலேயே, இந்த நத்தார் மரம் நிறுவப்பட்டுள்ளது.

வான்கலம் ஒன்றின் பாகம் களுவாஞ்சிக்குடியில் கரையொதுங்கியது

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி கடற்கரையில், வான்கலம் ஒன்றின் பாகம் என்று நம்பப்படும், 15 அடி நீளமான உலோகப் பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

நியூசிலாந்தில் தீவிபத்துக்கு ஈழத்தமிழர்கள் மூவர் பலி – மூவர் படுகாயம்

நியூசிலாந்தின் சவுத் ஓக்லாந்தில் இன்று அதிகாலை வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ஈழத்தமிழர்கள் மூவர் பலியாகினர். மேலும் மூன்று பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவுக்கு போர்க்கப்பல் வழங்குகிறது ஜப்பான்

சிறிலங்கா கடற்படைக்கு கப்பல் ஒன்றை வழங்குவதற்கு ஜப்பானிய  அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜப்பானின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயுகி மியாசாவா, இதனைத் தெரிவித்துள்ளார் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.