கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு அரசியலமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்று கொழும்பில் கூடி அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்று கொழும்பில் கூடி அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடியது.
அம்பாந்தோட்டையில் தெற்கு கைத்தொழில் அபிவிருத்திய வலய ஆரம்ப நிகழ்வு நடைபெற்ற இடத்துக்கு, நாமல் ராஜபக்ச தலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் எவ்வாறு வருவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறித்து, சிறிலங்கா காவல்துறை தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அம்பாந்தோட்டையில் தமது காணி உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக போராடிய மக்களின் மீது சிறிலங்கா அரசாங்க குண்டர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக, அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளிடம், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச முறையிட்டுள்ளார்.
தெற்கு கைத்தொழில் வலயத்தில் சீனாவின் முதலீட்டில் ஆரம்பிக்கப்படவுள்ள தொழிற்சாலைகளில் பணிக்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளவர்களுக்கு பயிற்சிகளை அளிப்பதற்கான தொழிற்பயிற்சி நிறுவகம் ஒன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டையில் சீனாவின் முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் இடம்பெற்ற மோதல்களில், 21 பேர் வரை காயமடைந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இடம்பெற்றது. நேற்று மாலை 4.50 மணிக்கு ஆரம்பமாகிய இந்தக் கூட்டம் சுமார் 3 மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றது.
கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பகுதி நேரமாக விமான நிலையம் மூடப்படுவதால், கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலயம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெறவுள்ள நிலையில், அம்பாந்தோட்டையில் பேரணிகள், கூட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்குத் தேவையான அரசியலமைப்பு திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்கள் உள்நாட்டு விசாரணை மீது நம்பிக்கை கொள்ளாததாலும், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நிபுணத்துவம் உள்நாட்டில் இல்லை என்பதாலுமே, கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி தெரிவித்துள்ளது.