கி.பி.அரவிந்தன்: நினைவுகளோடு தொடரும் பயணம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாள்…..! புதினப்பலகையின் நிறுவக ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளருமான கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களை, நாம் இழந்த நாள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாள்…..! புதினப்பலகையின் நிறுவக ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளருமான கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களை, நாம் இழந்த நாள்.
இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, பங்களாதேஷ், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தினார்.
தமிழ்நாடு மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியிடம் தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கச்சதீவுக் கடலில் நேற்றுமுன்தினம் இரவு சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம், தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய- சிறிலங்கா நாடுகளுக்கிடையிலான உறவுகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தென்னாபிரிக்க அதிபர் உள்ளிட்ட நான்கு நாடுகளின் தலைவர்களுடன் இன்று இரதுரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நடந்த இந்தச் சந்திப்பில், நல்லிணக்க விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.
இந்திய கடற்படையின் நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பலான ஐஎன்எஸ் தர்ஷக் இரண்டு மாதகால ஆய்வுப் பயணம் ஒன்றை சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ளது.
சிறிலங்காவின் முப்படைகளுக்கும் எதிராக குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்குத் தாம் தயாராக இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பலாலி படைத்தளத்தில் நேற்று படையினர் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாரபட்சங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் குணவியல்பு தொடர்பாகத் தனது தந்தை பேராசிரியர் ந.சண்முகரட்ணம் அவர்களிடமிருந்து தனது சிறுவயதில் பெற்றுக்கொண்ட சில அனுபவங்களையும் கற்றுக்கொண்ட பாடங்களையும் Klassekampen நாளிதழில் 03.02.17 எழுதிய இப்பதிவில் நினைவு கூர்ந்திருக்கின்றார்.
நான் இங்கு இரவில் நித்திரை கொள்ளும் போது எனது வீட்டில் இருப்பது போல் கற்பனை செய்து கொள்வேன்’ என புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு வெளியே தங்கியுள்ள 83 வயதான சிங்கரத்தினம் செல்லம்மா கூறினார்.