தமிழக அரசின் 54 தொன் உதவிப் பொருட்களுடன் வந்தது ‘சௌர்யா’
இந்திய கடலோர காவல்படை கப்பலான ‘சௌர்யா’ மனிதாபிமான உதவிப் பொருள்களுடன் நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை அடைந்துள்ளது.
இந்திய கடலோர காவல்படை கப்பலான ‘சௌர்யா’ மனிதாபிமான உதவிப் பொருள்களுடன் நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை அடைந்துள்ளது.
இந்திய கடலோர காவல்படை மற்றும் சிறிலங்கா கடலோர காவல்படை ஆகியவற்றுக்கு இடையிலான, 8வது உயர்மட்டக் கூட்டம் இன்று புதுடில்லியில் நடைபெற்றது.
அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட, ஷேர்மன் என்ற ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் விரைவில் சிறிலங்கா கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்திய கடலோரக் காவல்படையின் இரண்டு பாரிய ரோந்துக் கப்பல்கள் ஒரு வார காலப் பயணமாக நாளை, சிறிலங்காவுக்கு வரவுள்ளன.
சிறிலங்காவுக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கிய ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் நேற்று சிறிலங்கா கடலோரக் காவல் படையில் அதிகாரபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டது.
இந்திய அரசாங்கத்தினால் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்ட, ஆழ்கடல் ரோந்துக் கப்பல், இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தியக் கடலோரக் காவல்படையின் ஐசிஜிஎஸ் வருண என்ற ரோந்துக் கப்பல், சிறிலங்கா கடலோரக் காவல்படையிடம் கையளிக்கப்படவுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பயன்பாடு, திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டியதும், சிறிலங்கா அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதும், சிறிலங்காவின் நிலையான அபிவிருத்திக்கு முக்கியமானது என்று சிறிலங்கா- ஜப்பானிய பிரதமர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டணிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் முன்னகர்வுகளுக்கு எதிர் நடவடிக்கையாக, சிறிலங்கா கடலோரக் காவல்படையின் திறனை வலுப்படுத்துவதற்கு ஜப்பான் உதவ முன்வந்துள்ளது என்று ஜப்பானிய ஊடகமான The Asahi Shimbun செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய கடலோரக் காவல்படையின் சிஜிஎஸ் சூர் என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், நல்லெண்ண மற்றும் பயிற்சிக்கான பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.