இந்திய- சிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகள் முக்கிய பேச்சு
கடல்சார் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பாக, இந்திய- சிறிலங்கா கடலோரக் காவல்படை உயர் அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
கடல்சார் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பாக, இந்திய- சிறிலங்கா கடலோரக் காவல்படை உயர் அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
கூட்டுப் பயிற்சிகளை நடத்துவது தொடர்பாக சிறிலங்காவுடன், இந்திய கடலோரக் காவல்படை புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளது. இந்திய கடலோரக் காவல்படை பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறி நுழைவது தொடர்பான, ஒளிப்பட ஆதாரங்களை கையளித்துள்ளதாக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சுக்கு சிறிலங்கா கடற்படை, கையளித்துள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் திருகோணமலைத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டுள்ளனர்.
அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற போது, இந்தோனேசியக் கடற்பரப்பில் வைத்து அவுஸ்ரேலியக் கடலோரக் காவற்படையால் கைது செய்யப்பட்ட 37 இலங்கையர்கள் நேற்று சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.