மேலும்

இந்தியா வழங்கிய ரோந்துக் கப்பல் சிறிலங்கா கடலோரக் காவல் படையில் இணைப்பு

SLCGS Suraksha (1)சிறிலங்காவுக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கிய ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் நேற்று சிறிலங்கா கடலோரக் காவல் படையில் அதிகாரபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டது.

இந்திய கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்த, “ஐசிஜி வருண” என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், கடந்த செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா கடலோரக் காவல்படையின் பயன்பாட்டுக்காக இந்தியாவினால் வழங்கப்பட்டது.

இந்தக் கப்பல், நேற்று கொழும்பு துறைமுகத்தில், சிறிலங்கா கடலோரக் காவல்படையில் அதிகாரபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டது.

சுரக்சா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பலை, சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன நேற்று இயக்கி வைத்தார்.

SLCGS Suraksha (1)

SLCGS Suraksha (2)

SLCGS Suraksha (3)

கொழும்பு துறைமுகத்தில் நேற்று மாலை நடந்த இந்த நிகழ்வில் இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, சிறிலங்காவின் கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் மற்றும் முப்படை அதிகாரிகள், அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

எஸ்எல்சிஜிஎஸ் சுரக்சா ரோந்துக் கப்பலின் கட்டளை அதிகாரியான கப்டன் நெவில் உபயசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கப்பல் சிறிலங்கா கடல்பரப்பில், கண்காணிப்பு, ரோந்துப் பணிகளிலும்,  மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படவுள்ளது.

1,160தொன் எடை கொண்ட இந்தக் கப்பல், 74.10 மீற்றர் நீளமுடையது. மணிக்கு 22 கடல் மைல் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய இந்தக் கப்பலில், 14 அதிகாரிகள் மற்றும் 86 மாலுமிகள் பணியாற்றுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *