இனவாதமே மகிந்தவைத் தோற்கடித்தது – ராஜித சேனாரத்ன
மகிந்த ராஜபக்ச கடந்த அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டமைக்கு இனவாதமே காரணம் என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச கடந்த அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டமைக்கு இனவாதமே காரணம் என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று திடீரென ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் பத்து நாட்கள் அங்கு தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.
உள்ளூராட்சித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பின்னரே நடத்தப்படும் என்றும், மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்க முடியும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமது முன்னாள் செயலராகப் பணியாற்றிய லலித் வீரதுங்க எந்த தவறையும் செய்யவில்லை என்றும், நாட்டின் பௌத்தர்களுக்கு அவர் ஆற்றிய பணிக்காகவே இந்த நிலைக்கு உள்ளாகியிருப்பதாகவும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த கோரிக்கையை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்து விட்டார்.
ஜப்பானிய பேரரசர் அகிஹிடோவின் அழைப்பின் பேரில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஜப்பானுக்குச் செல்லவில்லை என்று கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியை மீண்டும் இணைய வைப்பதில் வெளிநாட்டு சக்தி ஒன்று, அழுத்தங்களைக் கொடுத்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சுமார் பத்து நாட்கள் அவர் ஜப்பானில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிவான அரசியல் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு, புதுடெல்லிக்கு வருமாறு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார் என்று, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடமத்திய மாகாணசபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மைத்திரி- மகிந்த அணிகளுக்கிடையில் கடும் போட்டி எழுந்துள்ளது. மைத்திரி அணியின் வசமுள்ள வட மத்திய மாகாணசபையின் அதிகாரத்தை கைப்பற்றப் போவதாக மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.