ஜெனிவா கூட்டத்தொடரில் இருந்து நழுவினார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்
நாளை ஜெனிவாவில் தொடங்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஜெனிவாவில் தொடங்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மூன்று நாள் பயணத்தின் போது, சிறிலங்காவும் இந்தியாவும் பாதுகாப்பு தொடர்பான மூன்று புதிய புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளன.
செம்மணிப் புதைகுழி அகழ்வில், வெளியக தடயவியல் மற்றும் தொழில்நுட்ப உதவியை நாடுவது குறித்த ஐ.நா பரிந்துரையை பரிசீலித்து வருவதாக காணாமல் போனோருக்கான பணியகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கூட்டாட்சி கடல்சார் ஆணையத்தின் (FMC) தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையர் ரொபேர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் இன்று சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக எதிர்வரும் 8ஆம் நாள் கொழும்பு வரவுள்ளார்.
இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் வாய்மொழி வாதங்களுக்குப் பதிலளிக்கும் வாய்ப்பு மனுதாரர்களுக்கு மறுக்கப்பட்டதால் 22வது திருத்தச்சட்டமூலம் தொடர்பான எழுத்துமூலப் பதில்களை அளிக்கப் போவதில்லை என சிறிலங்கா சட்டவாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதிகாரப்பகிர்வு, நம்பகமான பொறுப்புக்கூறல் கட்டமைப்பு, சுதந்திரமான சிறப்பு சட்டவாளருடன் கூடிய சிறப்பு நீதிப் பொறிமுறை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் இணைய வேண்டும் என சிறிலங்காவிடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் குணப்படுத்துதலை முன்னெடுக்கவும் சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு, ஆசிகளைப் பெற்றுள்ளார்.