மேலும்

சிறிலங்காவுக்கான பாதீட்டு உதவியை அதிகரித்தது இந்தியா

2026-27 பாதீட்டில், சிறிலங்காவுக்கான பாதீட்டு  உதவியைஇந்தியா 4 பில்லியன் இந்திய ரூபாவாக ( 43.6 மில்லியன் டொலர்)  அதிகரித்துள்ளது.

இது 2025-26 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில்  3 பில்லியன் இந்திய ரூபாவாக ( 32.7 மில்லியன் டொலர்) இருந்தது.

2024-25 ஆம் ஆண்டில் சிறிலங்காவுக்கான இந்திய உதவி  3.17 பில்லியன் இந்திய ரூபாவாக ( 34.6 மில்லியன் டொலர்) இருந்தது.  பின்னர் 2025-26 ஆம் ஆண்டில்  3 பில்லியனாக திருத்தப்பட்டது.

தற்போது, 2026-27 ஆண்டுக்குக்கான நிதி ஒதுக்கீடு சுமார் 33% அதிகரிக்கப்பட்டுள்ளது.

2026-27 ஆம் ஆண்டிற்கான வெளிநாடுகளுக்கான மொத்த இந்திய உதவி 56.86 பில்லியன் இந்திய ரூபாவாக ( 620.1 மில்லியன் டொலர்)  முன்மொழியப்பட்டுள்ளது.

இது 2025-26 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள்  57.84 பில்லியன் இந்திய ரூபா ( 631.0 மில்லியன் டொலர்) ஆக இருந்தது.

2026-27 ஆம் ஆண்டில்  அதிக நிதியுதவியைப் பெறும் நாடாக பூட்டான் உள்ளது. அதற்கு  22.89 பில்லியன் ரூபா ( 249.7 மில்லியன் டொலர்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நேபாளத்திற்கு  8 பில்லியன் ரூபாவும், ( 87.3 மில்லியன் டொலர்)  மாலைதீவுக்கு 5.5 பில்லியன் ரூபாவும், ( 60.0 மில்லியன் டொலர்) ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *