மாகாணசபை தேர்தல்களை காலவரையின்றிப் பிற்போட அரசாங்கம் முடிவு
அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மாகாணசபைத் தேர்தல்களை காலவரையின்றிப் பிற்போடுவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மாகாணசபைத் தேர்தல்களை காலவரையின்றிப் பிற்போடுவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டினால் (NCPI) அளவிடப்படும் சிறிலங்காவின் ஒட்டுமொத்த பணவீக்கம், ஒரே மாதத்தில், 0.6 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
அண்மைய அமைச்சரவை மாற்றங்களை அடுத்து, அமைச்சுக்களின் கீழ் வரும் நிறுவனங்கள் சிலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை படுகொலைகளுக்காக, வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு, இழப்பீட்டு அலுவலகம் மூலம் சிறிலங்கா அரசாங்கத்திடம் சரியான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தேசிய சமாதான பேரவையின் நிர்வாக பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை மாவட்டத்தில் முதலீடுகளை விரிவுபடுத்த இந்தியாவை அனுமதித்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே கடுமையாக சாடியுள்ளார்.
1989 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் நடந்த படுகொலைகளில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கொலைகள் மற்றும் அழிவுகளுக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (4.5 பில்லியன் இலங்கை ரூபா) இழப்பீடு கோரியுள்ளனர்.
எந்தவொரு அமைச்சரும் அல்லது அரசாங்க அதிகாரியும் வெளிநாட்டு பிரமுகர்கள் அல்லது தூதுவர்களைச் சந்திப்பதற்கு முன்னர், ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று ஜனவரி மாதம் அரசாங்கம் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், கூறப்பட்டிருந்தது.
அளவ்வவில் இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் றியர் அட்மிரல் சரத் மகோற்றியும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து, பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா மின்சார சபை முன்மொழிந்த 6.8 சதவீத கட்டண அதிகரிப்பு முன்மொழிவை சிறிலங்கா பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.