மேலும்

தேசிய தரவு மையம் வெளிநாட்டுப் பயணங்களையும் கண்காணிக்கும்

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவினால் உருவாக்கப்படவுள்ள, தேசிய தரவு மையத்தின் மூலம், வெளிநாட்டு பயணங்களை  மேற்கொள்வோர், திரும்பி வருவோரைக் கண்காணிக்க முடியும் என்று  இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இரண்டு தேர்தல்கள்

நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்கள் 2020 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என்று  சிறிலங்கா தேர்தல்கள் ஆணையக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பதில் பிரதானியாக சவேந்திர சில்வா

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பதில் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூதரகப் பணியாளருக்குப் பிணை – வரவேற்கிறது சுவிஸ்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளரான கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதை சுவிஸ் வெளிவிவகாரத் திணைக்களம் வரவேற்றுள்ளது.

வடக்கு ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமனம்

வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவினால் இன்று  நியமிக்கப்பட்டுள்ளார்.

விரல் நுனியில் குடிமக்களின் அனைத்து தரவுகளும் – கோத்தாவின் புதிய திட்டம்

சிறிலங்காவின் அனைத்துக் குடிமக்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் அடங்கிய தேசிய தரவு மையம் (National data centre) ஒன்றை உருவாக்குவதற்கு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.

ரிஷாத் பதியுதீனிடம் சிஐடியினர் விசாரணை

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாத் பதியுதீனிடம், குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

சுவிஸ் தூதரக பணியாளர் பிணையில் விடுதலை

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நாளையுடன் ஓய்வு

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நாளையுடன் ( டிசெம்பர் 31) ஓய்வுபெறவுள்ளார்.

ராஜித சேனநாயக்க பிணையில் விடுவிப்பு

விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு, பிணை வழங்கி கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.