மேலும்

பிரித்தானியாவிடம் இழப்பீடு கோர சிறிலங்கா திட்டம்

காலனித்துவ ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சொத்து சேதங்கள், திருட்டுகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு பிரித்தானிய அரசாங்கத்திடம் சிறிலங்கா இழப்பீடு கோரவுள்ளது.

இதுதொடர்பாக பிரித்தானியாவிடம்  இழப்பீடு கோர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் சில ஆபிரிக்க நாடுகளின் முன்மாதிரியைப் பின்பற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியிருந்தார்.

ஆபிரிக்க நாடுகள் தங்களை குடியேற்ற நாடுகளாக மாற்றிய நாடுகளிடமிருந்து இழப்பீடு கோரத் திட்டமிட்டுள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டிருந்தபடி, சிறிலங்காவும் பிரித்தானியாவிடம் இழப்பீடு கோர திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *