மேலும்

சிறிலங்கா மீதான தடை விலக்கப்படவில்லை

சிறிலங்காவில் இருந்து மீன் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக விலக்கியுள்ளதாக, வெளியான செய்திகளை சிறிலங்காவின் உள்நாட்டு விவகார மற்றும் கடற்றொழில் அமைச்சு நிராகரித்துள்ளது.

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைப் பிற்போடுமாறு ஜெனிவாவில் கோரவுள்ளது அமெரிக்கா

தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைப் பிற்போடுமாறு, ஐ,நா மனித உரிமைகள் பேரவையிடம், அமெரிக்கா கோரக் கூடும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மோடியின் பயணத் திட்டத்தில் யாழ், கண்டி, அனுராதபுர நகரங்களும் உள்ளடக்கம்

அடுத்த மாத நடுப்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணம் செல்லவுள்ளதுடன் கண்டி அல்லது அனுராதபுரவுக்கும் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்றது ஏன்? – சம்பந்தன் விளக்கம்

கொழும்பில் நேற்று நடைபெற்ற சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில் தாம் பங்கேற்றதை நியாயப்படுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டுள்ளார்.

சம்பந்தன் பங்கேற்றது கூட்டமைப்பின் முடிவு அல்ல – சுரேஸ் பிரேமச்சந்திரன்

சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில், இரா.சம்பந்தன் பங்கேற்றது அவரது தனிப்பட்ட முடிவே என்றும், அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு அல்ல எனவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நிறைவேற்ற வேண்டிய பல விடயங்கள் உள்ளன- நிஷா பிஸ்வால்

சிறிலங்காவில் உண்மையாக நிறைவேற்ற வேண்டிய பல விடயங்கள் இன்னமும் இருப்பதாக தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் சம்பந்தன் – கூட்டமைப்புக்குள் சர்ச்சை

கொழும்பில் இன்று நடைபெற்ற சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்றுள்ளார்.

தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் மோடியின் வாழ்த்துச் செய்தி

சிறிலங்காவின் 67வது சுதந்திர நாளையொட்டி  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை மக்களுக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு ஆறுமாத காலஅவகாசம் – தடை தற்காலிகமாக தளர்வு

சிறிலங்காவின் மீன் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு விதித்திருந்த தடையை, ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளதாக, சிறிலங்காவின் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலிப் வேதாராச்சி தெரிவித்துள்ளார்.

சிறப்புத் தூதுவரை கொழும்புக்கு அனுப்புகிறது சீனா

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறப்புத் தூதுவர் ஒருவரை சீன அரசாங்கம் விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கவுள்ளது.