மேலும்

மட்டக்களப்பில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

ki-pi-memo-batti (1)ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், புதினப்பலகை ஆசிரியருமான மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு, நகர பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.

ஈழப் புனர்வாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கி.பி.அரவிந்தன் அவர்களுடன், முன்னர் இணைந்து பணியாற்றிய ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கே.சிறிஸ்கந்தராஜா (சிறி) தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ரி.யோகராஜா, எஸ்.ராஜதுரை, சட்டத்தரணி ரி.சிவநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சௌந்தரராஜா, எஸ்.ராநேந்திரன், உள்ளிட்டோர் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர்.

ki-pi-memo-batti (2)

ki-pi-memo-batti (1)

ki-pi-memo-batti (3)

ki-pi-memo-batti (4)

ki-pi-memo-batti (5)

ki-pi-memo-batti (6)

ki-pi-memo-batti (7)

கடந்த 8ம் நாள் காலமான, கி.பி.அரவிந்தன் அவர்கள் 1970களில் இருந்து, 1990இன் ஆரம்பம் வரை, ஈழப் புரட்சி அமைப்பின் பொதுக்குழு உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள்  – தேவஅதிரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *