சுஸ்மாவுக்கு இராப்போசன விருந்தளித்தார் மங்கள – சம்பந்தன், சந்திரிகாவும் பங்கேற்பு
இரண்டுநாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு,சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றிரவு இராப்போசன விருந்தளித்தார்.
இரண்டுநாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு,சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றிரவு இராப்போசன விருந்தளித்தார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடனான பேச்சுக்களின் போது, வடபகுதியில் உள்ள மீனவர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தினார்.
கொழும்புத் துறைமுக நகரத் திட்ட விவகாரத்தை சிறிலங்கா பொருத்தமான முறையில் தீர்க்கும் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா எடுத்துள்ள முடிவு குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங், பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்து, அவரது மகனான லெப்.யோசித ராஜபக்ச நீக்கப்பட்டு, சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு ஆண்டாக தடுத்து வைக்கப்பட்டுள்ள, பாலேந்திரன் ஜெயகுமாரியைப் பிணையில் விடுவிப்பதற்கு, சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம் இழுத்தடிப்புச் செய்து வருகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 13ம் நாள் தொடக்கம், 14ம் நாள் வரை சிறிலங்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சிறிலங்காவுக்கான இரண்டு நாள் பயணத்தை இன்று பிற்பகல் ஆரம்பித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் இருந்து வந்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட, முருகேசு பகீரதி என்ற பெண்ணை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு தடுத்து வைத்திருப்பதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை பிரித்தானியாவுக்கான ஐந்து நாள் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். அவருடன் 17 பேர் கொண்ட குழுவொன்றும் லண்டன் செல்லவுள்ளது.