அதிகாரப்பகிர்வு குறித்து மோடியுடன் பேசுவோம் – சுமந்திரன்
மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரான சிவில் அதிகாரியான என்.ஏ.ஏ.புஸ்பகுமார நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து எட்டு ஆண்டுகால இராணுவ ஆட்சியில் இருந்து திருகோணமலை மாவட்டம் விடுபட்டு, நேற்று முதல் சிவில் நிர்வாகம் மீளவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
போரின்போது நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையரின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை, சிறிலங்கா அரசு உருவாக்கவிருக்கும் உள்ளக விசாரணை மற்றும் நீதிக்கட்டமைப்பு பயன்படுத்தும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சீன நீர்மூழ்கிகள் சிறிலங்காவில் தரித்துச் செல்வதற்கு புதிய அரசாங்கம் அனுமதி அளிக்கும் என்று சீனா எதிர்பார்ப்பதாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் நடந்த போர் குறித்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை வரும் செப்ரெம்பர் மாதம் கண்டிப்பாக வெளியிடப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஐ.நா உறுதியளித்துள்ளது.
சிறிலங்காவின் வேண்டுகோளின் பேரில், இரண்டு நாடுகளும் ஏற்றுக் கொண்டதற்கமையவே, சிறிலங்காவுக்கு கடன்களை சீனா வழங்கியுள்ளதாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை வகித்த பங்கை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி பாராட்டியுள்ளார். இன்று ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடரில், உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரை அமர்வில் ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.
சிறிலங்கா – இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான நான்காவது கட்டப் பேச்சுக்கள் இன்று கொழும்பில் சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
ஊவா மாகாணசபை முதலமைச்சராக தம்மை மீண்டும் நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ச மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கிய ஆதரவை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆறு உறுப்பினர்கள், இன்று விலக்கிக் கொண்டுள்ளனர்.