மேலும்

பிரிவு: செய்திகள்

மகிந்தவுக்கு அடுத்த அதிர்ச்சி – மகாநாயக்கர்களிடம் முறைப்பாடு

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தங்காலையில் உள்ள வீடு நேற்று சிறிலங்கா காவல்துறையினரால், சோதனையிடப்பட்ட நிலையில், இன்று அவர் கண்டியில் மகாநாயக்க தேரர்களை சந்தித்து, தாம் பழிவாங்கப்படுவதாக முறைப்பாடு செய்துள்ளார்.

மார்ச் மாதம் கொழும்பு வருகிறார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மீறல்கள் குறித்து வெளியார் எவரும் விசாரிக்க முடியாது – என்கிறார் ரணில்

ரோம் பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திடாததால், நாட்டில்இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து வெளியார் தலையீடு செய்து விசாரணை செய்ய முடியாது என்று சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவ அதிகாரியிடம் சிவில் பாதுகாப்புத் திணைக்களம்

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜனக ரத்நாயக்க, நியமிக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மன்னனிடம் மாதம் 1 கோடி ரூபா கப்பம் வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்

குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல் மன்னன், வேலெ சுதா, தன்னிடம் கிரமமாக பணம் பெற்று வந்த முக்கிய அரசியல்வாதிகள் பலரின் பெயர்களை வெளியிட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று கூடுகிறது – புதிய எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிர்ப்பு

சிறிலங்காவில் கடந்த 8ம் நாள் நடந்த அதிபர் தேர்தலில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, முதல்முறையாக இன்று நாடாளுமன்றம் கூடவுள்ளது.

வடக்கு மாகாணசபைக்கு இடையூறாக இருந்த பிரதம செயலரும் மாற்றப்பட்டார்

வடக்கு மாகாணசபையின் செயற்பாட்டுக்கு இடையூறாக இருந்து வந்த வடக்கு மாகாண பிரதம செயலர் விஜயலட்சுமி ரமேஸ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மோடியைச் சந்தித்தார் மங்கள சமரவீர

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று மதியம் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.(இரண்டாம் இணைப்பு)

தமிழர்களுக்கு சுயாட்சி பற்றிய ரணிலின் கருத்து – கவனத்தில் கொண்டுள்ளதாம் இந்தியா

தமிழ் மக்களுக்கு கூடுதல் சுயாட்சி அதிகாரங்களை வழங்கத் தயாராக இருப்பதாக, சிறிலங்கா பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்துக் குறித்து இந்திய அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

3 மணிநேரப் பேச்சில் தமிழர் பிரச்சினை குறித்து ஆராய்வு – விபரங்களை வெளியிட இந்தியா தயக்கம்

தமிழர்களுடன் அரசியல் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம், இந்தியா வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.