சிறிலங்கா கடற்படையின் இரு இரகசிய தடுப்பு முகாம்கள் கண்டுபிடிப்பு
கொழும்பிலும், திருகோணமலையிலும் சிறிலங்கா கடற்படையினரின் இரகசியத் தடுப்பு முகாம்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கொழும்பிலும், திருகோணமலையிலும் சிறிலங்கா கடற்படையினரின் இரகசியத் தடுப்பு முகாம்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
முன்னாள் போராளிகளால் உருவாக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடவுள்ளதாக இந்திய செய்தி நிறுவனமான பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் எட்டாவது வேட்பாளராக- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.சௌந்தரராஜன் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
மீண்டும் மகிந்த ராஜபக்சவை அதிகாரத்துக்குக் கொண்டு வரும் வகையில் சீனா பரப்புரையில் இறங்கியுள்ளதாக வெளியான செய்திகளை கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் நிராகரித்துள்ளது.
திருகோணமலை மக்கெய்சர் மைதானத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட புதைகுழி அகழ்வின் போது, ஆறு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து. இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வடக்கு, கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கும் விவகாரத்தில், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ள சூழலில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க திடீரென நேற்றிரவு பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில், குருநாகல மாவட்டத்தில் போட்டியிட மகிந்த ராஜபக்ச வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
போரின் இறுதிக்கட்டத்தில் வன்னியில் பணியாற்றிய மருத்துவர்களை தாம் சொல்லிக் கொடுத்தவாறு ஊடக மாநாட்டில் பதில்களைக் கூறியதற்காக, கே.எவ்.சி உணவகத்துக்கு அழைத்துச் சென்று இராணுவப் புலனாய்வாளர்கள் விருந்து கொடுத்துள்ளனர்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, குருநாகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்காக இன்றுகாலை வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.