மேலும்

வேட்புமனு குறித்து மைத்திரி இன்னமும் முடிவெடுக்கவில்லையாம் – அமைச்சர் ராஜித புதுக்குண்டு

rajitha-senarathnaஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில், குருநாகல மாவட்டத்தில் போட்டியிட மகிந்த ராஜபக்ச வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

அமைச்சரவைப் பேச்சாளராக ராஜித சேனாரத்ன கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிடுகையில்,

‘வேட்புமனுவில் கையெழுத்திடப்பட்டிருந்தாலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. அவற்றில் மாற்றங்கள் செய்யப்படலாம்.

ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலில் தம்மை அதிகாரத்துக்குக் கொண்டு வந்த, வாக்காளர்களுக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேன துரோகம் செய்யமாட்டார்.

வேட்பாளர் பட்டியல் தொடர்பாக அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அதில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில், அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட வேண்டும்.

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாளோருக்கு வாய்ப்பளிக்க்க் கூடாது என்ற அறிக்கை ஒன்று அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டால் அவர் முன்னாள் அதிபருக்குரிய சிறப்புரிமைகளை அனுபவிக்க முடியாது.

அவர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரானால், இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் தான் நியமிக்கப்படுவர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *