மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலகப் பங்களிப்பு அவசியம்- ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவின் நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டதாக, நம்ப முடியாததாக, நிலையற்றதாக இருப்பதால் தான், போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலகப் பங்களிப்பு வலியுறுத்தப்பட்டதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சந்திப்பு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அனைத்துலகப் பொறிமுறை தேவையில்லை – ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் மகாநாயக்கர்

உள்ளக பொறிமுறைகளின் மூலம், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும், அனைத்துலகப் பொறிமுறைகள் தேவையில்லை என்றும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம், மல்வத்தை பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே சித்தார்த்த சிறி சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாடு நாளை வெளியாகும்?

சிறிலங்கா அரசாங்கம் விரைவில் ஆரம்பிக்கவுள்ள போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாட்டை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் கொழும்பில் நாளை நடத்தவுள்ள ஊடக மாநாட்டில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளை கப்பலில் அனுப்பி வைக்க சுஸ்மா இணக்கம்

தாயகம் திரும்ப விரும்பும், இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் பட்டியல் ஒன்றைத் தயார் செய்யும் படியும், அவர்களைக் கப்பலில் அனுப்பி வைப்பதற்கான ஒழுங்குகளைச் செய்வது குறித்து ஆராய இந்தியா தயாராக இருப்பதாகவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

எக்னெலிகொட கடத்தல் விவகாரம் – மேலும் நான்கு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் விரைவில் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேலும், நான்கு அதிகாரிகள் கைது செய்யப்படவுள்ளனர்.

கூட்டமைப்பு – சுஸ்மா சந்திப்பு ஆரம்பமானது

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையிலான சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு திடீர் பயணம் – கட்டுநாயக்கவில் மங்களவை சந்திப்பு

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன்று காலை சிறிலங்காவுக்கு குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சுஸ்மா சுவராஜ் இன்று காலை மைத்திரியைச் சந்தித்துப் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று காலை, சிறிலங்கா அதிபர் மைத்திரி்பால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கொழும்பு வந்து சேர்ந்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் நான்கு நாள் பயணமாக இன்று காலை சிறிலங்காவை வந்தடைந்தார்.