சிறிலங்கா பிரதமரை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுனராக ரெஜினோல்ட் குரே, சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், மைத்திரிபால சி்றிசேன- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையில் கொள்கை மற்றும் அரசியல் ரீதியான விரிசல்கள் அதிகரித்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நல்லிணக்கப் பொறிமுறைகளை வடிவமைப்பதற்கான பொது கலந்துரையாடல் செயல்முறைகளை முன்னெடுப்பதற்கான இணையத்தளம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரால் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இந்தியாவிடமா, பாகிஸ்தானிடமா அல்லது வேறு நாட்டிடம் இருந்தா போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது என்று இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து, நியூயோர்க்கை தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகள் மற்றும் ஊழல் எதிர்ப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், 31 மில்லியன் டொலர் (சுமார் 4350 மில்லியன் ரூபா) நிதியுதவியை வழங்கும் திட்டம் ஒன்றை, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, முன்வைத்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளம் ஒன்றை அமைப்பதற்கு சீனா முன்வந்திருப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
காணாமற்போனவர்களில் சிலர் கனடாவிலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் வாழ்வதாகவும், ஏனையோர் அனைவரும் இறந்து விட்டனர் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.