மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

முன்னாள் புலிப் போராளிகளை கண்காணிக்கும் பொறிமுறையை வலுப்படுத்தக் கோருகிறார் கோத்தா

விடுதலைப் புலிகளின் தீவிர செயற்பாட்டாளர்களை கண்காணிப்பதற்கான பொறிமுறையை சிறிலங்கா அரசாங்கம் வலுப்படுத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தீவிரவாத முறியடிப்பு தொடர்பாக சிறிலங்கா படையினர் பாகிஸ்தானில் கூட்டுப் பயிற்சி

சிறிலங்கா, பாகிஸ்தான், மாலைதீவு இராணுவத்தினர் இணைந்து, பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில், தீவிரவாத முறியடிப்புத் தொடர்பான முத்தரப்பு இராணுவப் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழர்களின் உரிமைகள் குறித்து சிறிலங்கா அரசுடன் பேசுவார் சுஸ்மா

இரண்டு நாள் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், தமிழரின் உரிமைகள் சார்ந்த பிரச்சினை குறித்து முக்கிய கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, புதுடெல்லி ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

தமிழில் சிறிலங்காவின் தேசிய கீதம் பாடப்பட்டபோது சம்பந்தன் கண்களில் கண்ணீர்

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் கண்கள் பனித்து கண்ணீர் முட்டியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டினதும், படையினரதும் கௌரவம் பாதுகாக்கப்படும் – சிறிலங்கா அதிபர் வாக்குறுதி

சிறிலங்கா மக்களினதும், படையினரினதும் கௌரவத்தைப் பாதிக்காத வகையிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் – தமிழிலும் தேசியகீதம் பாட ஏற்பாடு

சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் நிகழ்வு இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது. இதில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் சிறிலங்காவின் தேசிய கீதம் பாடப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தைக் கைவிட்டார் சுஸ்மா

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் வரும் வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஒன்பதாவது இந்திய- சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவே அவர் கொழும்பு வரவுள்ளார்.

மிக்-27 போர் விமானங்கள், எம்.ஐ.24 தாக்குதல் உலங்குவானூர்திகள் அணிவகுப்பில் இருந்து நீக்கம்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய மிக்-27 போர் விமானங்களோ, எம்.ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்திகளோ இம்முறை சிறிலங்காவின் சுதந்திர நாள் அணிவகுப்பில் பங்கேற்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள மூத்த அதிகாரி கொழும்பு வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி வர்த்தகப் பிரதிநிதியான, மைக்கல் ஜே டிலானி என்ற, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரியே கொழும்பு வரவுள்ளார்.

யோசித ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தரவு

கடற்படைத் தளபதியின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளாமல் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக, லெப்.யோசித ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படி, சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு, பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.