கள மருத்துவமனை, மருத்துவர்களை சிறிலங்காவுக்கு அனுப்புகிறது பாகிஸ்தான்
வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு, 30 படுக்கைகளைக் கொண்ட நவீன கள மருத்துவமனையையும், நிவாரணப் பொருட்களையும், பாகிஸ்தான் அனுப்பவுள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு, 30 படுக்கைகளைக் கொண்ட நவீன கள மருத்துவமனையையும், நிவாரணப் பொருட்களையும், பாகிஸ்தான் அனுப்பவுள்ளது.
தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் முதலமைச்சராக நாளை பதவியேற்கவுள்ள, ஜெயலலிதாவுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்க பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்து போன மூன்று கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதலை சிறிலங்கா இராணுவம் நிறுத்தியுள்ளது.
சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிபுணர் குழுக்களையும் இந்தியா கப்பல்கள் மற்றும் விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
ஜப்பானில் அடுத்த வாரம் நடக்கவுள்ள ஜி-7 உச்சி மாநாட்டில், பங்கேற்கவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபேயின், சிறப்புப் பிரதிநிதி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகளின் விபரங்களை, வரும் ஜூலை 14ஆம் நாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறினால், சிறிலங்கா இராணுவத்தின் 58ஆவது டிவிசன் கட்டளை அதிகாரிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்படும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், வெளிநாட்டு உதவிகளுக்கான பணியகத்தின் பணிப்பாளர், ஹரி சாஸ்திரி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சம்பூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையத்துக்குப் பதிலாக, திரவ இயற்கை எரிவாயு மின் திட்டத்தை அமைக்குமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் ஒரு காலைப் பொழுது,வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் கைத்தொலைபேசி சில தடவைகள் ஒலித்தது. அவர் அப்போது தனது அதிகாரபூர்வ வதிவிடத்தில் இருந்தார். கொழும்பு நகரில் மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றான, ஸ்ரான்ட்மோர் கிரசன்ட்டில் அந்த வதிவிடம், சிறிலங்காவின் விமானப்படை மற்றும் இராணுவத் தளபதிகளின் வதிவிடங்களுக்கு நடுவே உள்ளது.
அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டமிடல் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ஆர் ருடர், சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டமை தொடர்பான தகவல்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.