இந்தியா எதிர்ப்பு – கச்சதீவில் தேவாலயம் கட்டும் பணிகளை நிறுத்தியது சிறிலங்கா அரசு
இந்திய அரசாங்கம் எழுப்பிய கரிசனைகளையடுத்து, கச்சதீவில் புதிய தேவாலயத்தை அமைக்கும் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.
இந்திய அரசாங்கம் எழுப்பிய கரிசனைகளையடுத்து, கச்சதீவில் புதிய தேவாலயத்தை அமைக்கும் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.
வடக்கில் முன்னரும் குற்றச்செயல்கள் இடம்பெற்று வந்ததாகவும், ஆனால் போர்க்காலத்தில் ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும், தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே.
அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின், மூலோபாய திட்டமிடல் மற்றும் கொள்கை பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ருடர் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் சுமித் மானவடுவின் மரணம், அவரது கர்மவினை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
அமெரிக்க திறைசேரி அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.
பாக்கு நீரிணையில் அமைந்துள்ள கச்சதீவில், புதிய தேவாலயத்தை அமைக்கும் பணிகளை சிறிலங்கா கடற்படை ஆரம்பித்துள்ளது.
வெளிநாடுகளில் பணம் பதுக்கியுள்ளவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று தாம், வெளிநாட்டில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கவில்லை என்று மறுத்துள்ளார் அவன்ட் கார்டே பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி.
ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம், மூன்று மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் படுகொலை தொடர்பாக புதிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு, அவரது சகோதரர் தயந்த அத்துலத்முதலி கோரிக்கை விடுத்துள்ளார்.
சரத் பொன்சேகாவை சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமித்தமைக்காக, தன்னையும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவையும், திருக்கை வாலினால் அடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.