மீண்டும் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட சிறிலங்கா பிரதமர்
சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் சட்டங்களை மீறியிருப்பதாகவும் அதுபற்றி விசாரணை நடத்துமாறும், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம், தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் முறைப்பாடு செய்துள்ளது.
சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் சட்டங்களை மீறியிருப்பதாகவும் அதுபற்றி விசாரணை நடத்துமாறும், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம், தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் முறைப்பாடு செய்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில், சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார் என தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபாவுக்காக, பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரங்கள் நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து வந்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம், இன்று மதியம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான ஊடக சுதந்திரச் சுட்டியில் சிறிலங்கா 139ஆவது இடத்தில், தரப்படுத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, தமது தூதரக வளாகத்தின் முன் நடைபெற்ற போராட்டங்கள், குறித்துப் பதிலளிக்கப் போவதில்லை என்று கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.
பிறிக்ஸ் (BRICS) கூட்டணியில் சிறிலங்கா இணைந்து கொள்வதற்கு, உதவத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றாதமை குறித்து, ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு கவலை வெளியிட்டுள்ளது.
ஜூன் மாதம் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு, சர்வதேச நாணய நிதியத்திடம், உறுதியளிக்கப்பட்டுள்ளதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.